உ.பி: தியோரியாவில் பெண் ஒருவர் தனது உறவினர்களால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிமா கதுன் என்ற பெண்ணை குடும்பத்தகராறு காரணமாக அவரது மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த பெண் வலியால் அலறித்துடித்தும் யாரும் உதவ முன் வரவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ வைரலானதை அடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.