மாதவரத்தில் ரிவர்ஸ் வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி

69பார்த்தது
மாதவரத்தில் ரிவர்ஸ் வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி
மாதவரம், லோட்டஸ் காலனி 3வது தெருவில், பிரபல நிறுவனமான ஜூவாரி சிமென்ட் நிறுவன கிடங்கு உள்ளது. அதில், நேற்று முன்தினம் மாலை, லாரியில் இருந்து சிமென்ட் மூட்டைகள் இறக்கப்பட்டன.

அங்கு, மற்றொரு லாரியும் சிமென்ட் மூட்டைகள் இறக்க வந்தது. அதன் போக்குவரத்து வசதிக்காக, ஏற்கனவே அங்கிருந்த லாரியை, அதன் ஓட்டுனர் பின்னோக்கி இயக்க துவங்கினார். அப்போது, லாரியின் தார்ப்பாயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சுமை துாக்கும் தொழிலாளி பாண்டியன், 55, என்பவர், தடுமாறி கீழே விழுந்தார். இதில், லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார்.

தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், துாத்துக்குடி, மாதா தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் முருகன், 51, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 'தார்ப்பாய் மறைத்ததால், அதை அகற்றும் பணியில் இருந்த தொழிலாளி பாண்டியன், லாரியின் பின்னால் இருந்தது தெரியவில்லை' என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி