தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி

20641பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானதோடு 45க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததை அடுத்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலையில் மூன்று குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். “வெடி விபத்து சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்” மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: ANI