புத்தரின் மனைவி யசோதரை அரசர் சுப்பபுத்தருக்கும் தாய் பமிதாவிற்கும் பிறந்த பெண்ணாவார். அழகும் தேஜஸும் நிரம்பப் பெற்ற அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். யசோதரையின் அழகுக்கு நிகராக எதையுமே கூற முடியாதாம். இளவரசி யசோதரையின் தாய் பமிதா புத்தரின் தந்தை சுத்தோதனரின் சகோதரி ஆவார். இவர் கோலிய வம்சத்தை சேர்ந்த சுப்பபுத்தரை திருமணம் செய்தார்.கோலிய வம்சமும் சாக்கிய வம்சமும் சூரிய குலத்தின் உட்பிரிவுகள். இவர்களின் குலங்களுக்கு நிகராக வேறு இல்லாததால் உறவுக்குள்ளேயே திருமணம் செய்தனர்.