திருவள்ளுவர் ஆன்மீகத்தை வலியுறுத்தினாரா?

73பார்த்தது
திருவள்ளுவர் ஆன்மீகத்தை வலியுறுத்தினாரா?
திருக்குறளில் இறைவழிபாடு குறித்து திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ள பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்கம் மருதாச்சல அடிகள், “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி” என்ற குறளில் இந்திரனை குறிப்பிட்டுள்ளதாகவும், இதே போல் பல இடங்களில் சிவனையும் மற்ற தெய்வங்களையும் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். சிலர் திருக்குறளில் உள்ள கருத்துக்கள், பகவத் கீதையிலிருந்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் திருக்குறள் வேத காலத்திற்கு முன்பே எழுதப்பட்டது. எனவே வேத காலத்திற்கும், திருவள்ளுவர் காலத்திற்கும் தொடர்பு இல்லை என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி