திருவொற்றியூரில் புதியதாக கட்டப்படும் சந்தையில், மீன் வியாபாரிகளுக்கு அமைந்துள்ள 120 கடைகளில் 70 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய சந்தையில் பழையபடி 120 கடைகளை முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, மீன்களை தரையில் கொட்டி பெண் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.