புழல் பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா யாகசால பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
செங்குன்றம், புழல் ஜிஎன்டி சாலை செக்போஸ்ட் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோ பூஜை தன பூஜை நவகிரக ஹோமம் கால பூஜை லட்சுமி கணபதி ஓமம் போன்ற யாகத்துடன் துவங்கிய கும்பாபிஷேகமானது இன்று நான்காம் யாகசாலை பூஜை நடைபெற்று மங்கள வாத்தியங்களுடன் யாகத்தில் இருந்து புனிதநீர் கலசம் புறப்பட்டு ஆலயத்தின் மூலவரான செல்வ விநாயகர் ஆலயத்தின் விமான கும்பாபிஷேகம் மூலவர் மூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலய கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனித நீரானது அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு மேலும் யாகசாலையில் பூஜை செய்த கலசங்கள் ஆலய நிர்வாகிகளால் பக்த கோடிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செல்வ விநாயகர் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்று தொடர்ந்து பக்த கோடிகளுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஆலய நிர்வாகிகள் டி. மணிகண்டன், சி மணிகண்டன் நீலகண்டன் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பகுதி வாழ் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.