சென்னை குடிநீர் வழங்கும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் சென்னை குடிநீர் வழங்கும் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து வரத் துவங்கியுள்ளது. கோடையில் பூண்டி புழல் சோழவரம் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் 5. 6மில்லியன் கன அடியாக குறைந்து வந்த நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் 5. 8 மில்லியன் கனஅடியை எட்டி நீர்மட்டம் கணிசமாக உயர தொடங்கியுள்ளது பூண்டி அணையில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 217கன அடி தண்ணீர் லிங்க் கால்வாய் மற்றும் பேபி கால்வாய் வழியாக திறக்கப்பட்டு வருகிறது 3631மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 194மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது மொத்த உயரம் 35அடி நீர்மட்டம். தற்போது அதில் 19. 32அடி நீர்மட்டம் உள்ளது.
பூண்டி அணையில் 6%மட்டுமே கொள்ளளவு உள்ளது
சோழவரம் ஏரியில் 9. 6%. செம்பரம்பாக்கம் ஏரியில் 47. 5%. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 63. 6 %, புழல் ஏரியில் 78. 60% நீர் உள்ளது.
11. 7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி புழல் சோழவரம் செம்பரம்பாக்கம் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைவதால் புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி நீர் செல்கிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 3231 மில்லியன் கனஅடியில் வெயிலின் காரணமாக படிப்படியாக குறைந்து வெறும் 194 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி