பூந்தமல்லி நகராட்சி சார்பில் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

64பார்த்தது
பூந்தமல்லியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் நகராட்சி சார்பில் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கிய அதிகாரிகள்


பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதுடன் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மாடுகளை சாலையில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகள் சாலையில் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமௌலி உள்ளிட்டோர் வீடு வீடாக தேடிச் சென்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அதில் மாடுகளை சாலையில் திரிய விட கூடாது எனவும் அப்படி திரிந்தால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபாராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் தொடரும் பச்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி