சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க சசிகலா உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.