நீலகிரி: குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நள்ளிரவு கரடி ஒன்று புகுந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வந்த கரடி, கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்து, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தின்றும், சிதறடித்தும் வீணாக்கியது. வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.12 லட்சம் செலவில் புதிதாக இந்த ரேஷன் கடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.