ரிசர்வ் வங்கியிடம் தற்போது எவ்வளவு தங்கம் இருப்பு உள்ளது?

75பார்த்தது
ரிசர்வ் வங்கியிடம் தற்போது எவ்வளவு தங்கம் இருப்பு உள்ளது?
அக்டோபர் மாதத்தில் சர்வதேச மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் 60 டன் ஆகும். இதில் சுமார் 48% தங்கத்தினை (27 டன்) இந்திய ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள இருப்புகளுடன், 27 டன்கள் சேர்ந்துள்ளதால் மொத்த தங்கத்தின் இருப்பு 882 டன்னாக உயர்ந்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ரிசர்வ் வங்கி 24 டன் தங்கத்தினை வாங்கியது. தங்கத்தினை மிக அதிக அளவில் வாங்கிய இரண்டாவது வங்கி என்கிற பெயரை இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி