ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2025 ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என டோக்கியோ கவர்னர் யுரிக்கோ கோய்கே அறிவித்துள்ளார். அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023இல் மொத்தமாக 7,27,277 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த புதிய விடுமறை கொள்கையின் மூலம் திருமணமானவர்கள் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதால் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.