கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயது விவசாயி ஒருவர், திருமணத்திற்காக மேட்ரிமோனி மூலம் பெண் தேடியபோது, பிரியா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து இருவரும் பேசிவந்த நிலையில், பிரியா தனது அக்காவின் சிகிச்சைக்கு எனக்கூறி ரூ.7 லட்சம்வரை பறித்துள்ளார். பின் பிரியாவை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த இளைஞர் போலீசில் புகாரளித்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் பிரியாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்ததும், பல இளைஞர்களிடம் இதே போன்று ரூ.12 லட்சம்வரை மோசடி செய்ததும் தெரியவந்தது.