திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று (டிச. 12) சென்று கொண்டிருந்தது. குறுகிய சாலையில் பேருந்து செல்லும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பேருந்து ஓட்டுநர் முயன்றார். அப்போது சாலையின் ஓரத்திற்கு சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.