திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியில் உள்ள அருள்மிகு சோமநாதர் கோயிலில் இருந்து சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளை படித்த வல்லுனர்கள் இது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கண்டறிந்துள்ளனர். ஒரு கல்வெட்டில் இது சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தது என்றும், மற்றொரு கல்வெட்டில் கோயிலின் கணக்காளர் உள்ளிட்டவர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கான ஆணைகளும் பதிவாகியுள்ளது.