வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோட்டயம் வைக்கத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமில்லாமல் ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம் என்றார்.