ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “இந்த வெற்றி இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டு எடுப்பதற்கான முடிவு. ஒவ்வொரு காஷ்மீரியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கும் தருணம் இது” என்றார்.