ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை பயங்கரவாதிகள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒரு வீரர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எல்லையில் பெரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.