ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது

84பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 2ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் சிலர் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி