11 நாட்கள் திருவிழா போல் கோலாகலமாக நடந்த புத்தகத் திருவிழா

82பார்த்தது
திருவள்ளூரில் கடந்த 7-ஆம் தேதி புத்தக கண்காட்சி சி. வி நாயுடு சாலையில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நூலக ஆணைக் குழு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியில் 108 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் முயற்சியில் உருவான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன இதில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர் மேலும் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் கவிஞர்கள் பதிப்பாளர்கள் மேடைப் பேச்சாளர்கள் அறிஞர் பெருமக்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் தொலைக்காட்சி நெறியாளர்கள் ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர் இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் எஸ்கே முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர் இந்நிகழ்வில் எழுத்தாளர் செங்கதிர் சண்முகம் அவர்களை கவிஞர் வைரமுத்து பாராட்டி பரிசளித்து கௌரவித்தார் திருவள்ளூரில் கடந்த 11 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தந்து லட்சக்கணக்கான வாசகர்களும் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி