ஏனாதிமேல் பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள
ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா ஆலயத்தில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர்
மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோவில் ராஜகோபுரத்திற்கும் திரௌபதி அம்மனுக்கும் தர்மராஜாவிற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது கலச நீரானது தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் கும்முடிபூண்டி பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் கி வே ஆனந்தகுமார் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் தமிழரசன் சதீஷ் கிராம முக்கிய நிர்வாகிகள் ஆ. குப்புராமன் லோ. ராஜி.
மு. கணபதி செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.