புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் வீரியமிக்க மன்னர்கள் பயன்படுத்திய 10 அரிய வகை விதை நெற்களை 25 விவசாயிகளுக்கு வழங்கியது. இதில் அரிய வகை நெல்மணி விதைகளான ராஜமுடி, தங்கசம்பா, சேலம் சன்னா, ஆத்தூர் கிச்சலி, செம்புலிச் சம்பா, இரத்தசாலி, கிச்சிலி சம்பா, வாசனை சீரக சம்பா, அரிகஜனவல்லி, இலுப்பைப் பூ சம்பா உள்ளிட்ட விதை நெல்,விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.