தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையால் உருவாக்கப்பட்ட இறைச்சி கினிக்கோழி தான் முத்துக்கினிக்கோழி. இவை எல்லா தட்பவெட்ப சூழலிலும் வளரும் தன்மை உடையது. வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் போது, மண்ணில் இருக்கும் புழு, பூச்சி, புல் சாப்பிடுவதால் சிறந்த களைக்கொல்லி கோழியாகவும் இருக்கும். இதன் முட்டை மற்றும் இறைச்சி அதிகநறுமணத்துடன் இருப்பதால், இறைச்சி ஆகிய இரு வித வளர்ப்பிற்கு முத்துக்கினிக்கோழி வளர்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.