சாதி சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயரில் சாதியை சேர்த்துள்ளனர். அங்கு "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்தும் நிலையே உள்ளது. சாதி பெயரில் சங்கம் துவங்க முடியுமா? சாதியை நிரந்தரமாக்குவதை அந்த சங்கம் இலக்காக கொள்ள முடியுமா? என தமிழக அரசு பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.