சவுதி அரேபியாவில் ஒரு நதி கூட கிடையாது. இந்த நாட்டில் குளம், ஏரி என எதுவும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரையே சார்ந்து இருக்கின்றனர். இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு தண்ணீருக்காகவே செலவு செய்யப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அதிக செலவில் இங்கு செயல்படுத்தி வருகின்றனர். அதே போல வாடிகன் என்கிற மிகச் சிறிய நாட்டிலும் ஆறுகள், ஏரிகள் கிடையாது.