விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி (70) என்பவரது வீட்டில் இருந்த 11 சவரன் நகை திருடுபோனது. போலீசார் நடத்திய விசாரணையில், காளிராஜ் (19) என்ற இளைஞர் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த நகைகளை தனது தாய் பத்மாவதி (34), சித்தி ஆனந்தவல்லி (29) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அதனை அடகுவைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தான் காதலிக்கும் பெண்ணை ஈர்பதற்காக நகை திருடி காளிராஜ் பைக் வாங்கியது தெரியவந்துள்ளது.