விழுப்புரம் மாவட்டம் மணிநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வீடு, கடைகள் உள்ளிட்டவை அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகிகளான பிரசாந்த் மற்றும் அய்யனார் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிரசாந்த் கும்பலாக சென்று, அய்யனாரின் கடை மற்றும் வீட்டை அடித்து நொருக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.