காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் இன்று (ஜன 9) அமலுக்கு வரும் நிலையில், பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதி மீறல் இருந்தால் அதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது. ஒப்புக்கொண்டபடி தன்வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும் என நெதன்யாகு கூறியுள்ளார்.