பயணி வாக்குவாதம்.. நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய நடத்துநர்

77பார்த்தது
பயணி வாக்குவாதம்.. நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய நடத்துநர்
கரூர் மாவட்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். தொடர்ந்து, பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அந்த பயணி, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நடத்துநர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் அந்த பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர், கொட்டும் மழையில் பேருந்தில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் அமர்ந்து நடத்துநர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மற்ற பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி