பெங்களூருவில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்காக அசைவ உணவு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பொது இடங்களில் அசைவு உணவுகள் விற்கப்பட்டால், அதை உண்பதற்காக பறவைகள் வரும் என்பதாலும், அதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.