அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் தான் பதவி விலகும் முன்னர் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். அதன்படி வன்முறையற்ற போதைப்பொருள் குற்றவாளிகள் 2 ஆயிரத்து 500 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்புகளை வழங்கி உத்தரவிட்டார். இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.