தென்காசி: செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் பைம்பொழில் என்ற இயற்கை எழில் சூழ்ந்து, பசுமை படர்ந்துள்ள இடத்தில் சிறிய மலைமீது அமைந்திருக்கிறது அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில். இந்த மலைமீது ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுக்கள் வழியாக ஏறிச் சென்றால் திருமலைக்குமரன் கோயிலை சென்றடையலாம். மிகவும் சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.