நோயை உண்டாக்கும் கொசுக்கள் மூலமாகவே நோய்க்கான மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் விஞ்ஞானிகள். அந்தவகையில், மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆண் கொசுக்களின் விந்தணு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்குமாம். இவை கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது விஷம் இருக்கும் விந்து பெண் கொசுக்களின் உடலுக்கு சென்று விடுகிறது. இதனால், இனச்சேர்க்கைப்பிறகு அந்த குறிப்பிட்ட பெண் கொசு உயிரிழந்து விடுமாம்.