தமிழ்நாடு பாரதமாதா சிலம்ப கழகத்தின் சார்பாக சிலம்பப் போட்டி.

71பார்த்தது
தமிழ்நாடு பாரதமாதா சிலம்ப கழகத்தின் சார்பாக சிலம்பப் போட்டி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்சட்டியில் இயங்கி வரும் வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பாரதமாதா சிலம்ப கழகத்தின் சார்பாக ஒன்பதாம் ஆண்டு சிலம்பப் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டிஜே கோவிந்தராஜன் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளை கண்டு களித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார் நிகழ்வில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், தமிழ்நாடு பாரத மாதா சிலம்ப கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி