அம்பத்தூர் - Ambattur

ஆவடி: மருத்துவ படிப்பிற்கு சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி

ஆவடி: மருத்துவ படிப்பிற்கு சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் கௌசல்யா என்பவர் 22.10.2024ம் தேதி கொடுத்த புகார் மனு சம்பந்தமாக வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் கணவர் சுப்பிரமணியின் நண்பர் கோவிந்தராஜ் என்பவர் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் வேலை செய்து வருவதாகவும், தனக்கு கல்விதுறையில் அதிகாரிகள், அமைச்சர்கள் நன்கு தெரியும் என கூறியதால், மனுதாரர் கணவர் சுப்பிரமணியின் நண்பரான சாதிக்கின் மகள் ஆயிஷா என்பவருக்கு MBBS சீட்டு வாங்கித் தரும்படி கூறி 15 லட்சத்தை மனுதாரரிடம் கொடுத்துள்ளார்.  ஆயிஷாவின் நண்பர்களான ஆயிஷாசித்திகா, உதய், நுரைன், சையத் ஆகியோர்களும் தலா 15 லட்சம் விதம் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக மொத்தம் 75 லட்சத்தை மனுதாரரிடம் கொடுத்துள்ளார்கள். ரூ.85,44,000/-ஐ கோவிந்தராஜின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் (JobRacket) ஆல்பி பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் தலைமறைவாக இருந்த எதிரியான கோவிந்தராஜ் 42/24 (நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் சுமார் 09 வருடங்களாக பணிசெய்து வருகிறார்) கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా