சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் குகன்ராஜ் 26, ஹேமந்த் 29 இருவரும் நண்பர்கள். நேற்று இரவு குகன்ராஜ் மனைவி தீபாவை பார்ப்பதற்காக வியாசர்பாடி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் புழல் பைபாஸ் சாலையில் நள்ளிரவில் வந்தபோது புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலத்தில் சுவரில் மோதி 40 அடி கீழே உள்ள சர்வீஸ் சாலையில் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.
இதில் ஏமந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார் குகன்ராஜ் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம்
போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து படுகாயம் அடைந்த குகன் ராஜை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.