சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததை கிண்டல் செய்தவரை சக நண்பர்கள் கொடூரமாக தாக்கினர். படுகாயமடைந்த ஜீவரத்தினம் என்பவர் தற்போது உயிரிழந்தார். வேளச்சேரியில் மதுபோதையில் நண்பர்கள் தாக்கியதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், திடீர் திருப்பமாக கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே தோற்றதால் தாக்கவில்லை என்றும் நண்பனின் மனைவியிடம் தவறாக பழகியதால் தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.