நெல்லை மாநகர மேலப்பாளையம் அம்பை சாலையில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் குடிநீர் வீணாகச் செல்கின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இவ்வாறு வீணாகச் செல்லும் குடிநீரைச் சரிசெய்ய மேலப்பாளையம் மண்டல நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.