சுட்டெரிக்கும் வெயிலிலும் ரம்மியமாக காட்சி தரும் மாஞ்சோலை

63பார்த்தது
சுட்டெரிக்கும் வெயிலிலும் ரம்மியமாக காட்சி தரும் மாஞ்சோலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தேயிலை எஸ்டேட் இயங்கி வருகிறது. மலைப்பிரதேசமான இங்கு எப்போதும் இயற்கையான சூழல் அமைந்திருக்கும். குறிப்பாக தற்போது நகர் பகுதியில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வரும் நிலையில் மாஞ்சோலையில் திரும்பும் இடமெல்லாம் பச்சை பசேல் என ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி