வில்வித்தை.. தீபிகா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம்

68பார்த்தது
வில்வித்தை.. தீபிகா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம்
சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் தனிநபா் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி, தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகிய 4 பேர் தகுதிபெற்றனர். இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் மோதினார். இதில் 0-6 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். இதனால் இரண்டாம் இடம் பிடித்த தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தொடர்புடைய செய்தி