பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே இன்று (ஏப்ரல் 15) மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிவியில் செய்தியை பார்த்துவிட்டு தற்போது பிற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்துள்ளனர். யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டதோ என பதட்டத்தோடு காத்திருக்கின்றனர்.