நெல்லை சரக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர் முதல் உயர் அதிகாரி வரை 50 நபர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவித்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்வில் தென்மண்டல ஐஜி பிரேமான் சின்கா, மாநகர ஆணையர் ரூபேஷ்குமார், டிஐஜி மூர்த்தி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.