வேலைவாய்ப்பு விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மோசடி விளம்பரங்கள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், அவற்றை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.