பஞ்சாபின் லூதியானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண் தனது வேலையை முடித்துவிட்டு போன் பேசியபடியே வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதனை கவனித்த திருடன் ஸ்கூட்டரில் வந்து போனை திருடிச்செல்ல முயன்றுள்ளான். அப்பெண் போனை இறுகப்பற்றிக்கொள்ளவே அவரை சாலையில் தரதரவென இழுத்துச்சென்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.