தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், நூற்றாண்டுகளைக் கடந்த 2,238 பள்ளிகளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பள்ளியாக தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (ஜன.27) நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் எம்எல்ஏ-வாகவும், இந்திய அரசு நிறுவனங்களான இஸ்ரோ மற்றும் கூடங்குளம் போன்ற நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.