மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மதவக்குறிச்சி கிராமத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்தி பரப்பப்படுகிறது. உண்மையில் காலாவதி மருந்து மற்றும் மாத்திரைகள் மட்டுமே அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.