நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கொண்டு வர வலியுறுத்தி நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள், கடந்த சில தினங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் கார்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. வன்முறைகளை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.