நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து ஒன்றில் அதன் ஓட்டுநர் நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார். எனவே ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஓட்டுநர், சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.