தென் தமிழகத்தில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா திருவிழா பெரிதும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். இந்த கோவிலில் தசரா திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் நேற்று தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.